ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் இணைந்த பின்லாந்து..! - Seithipunal
Seithipunal


இரண்டாம் உலகப் போரை அடுத்து 1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில், ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது ஒரு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, நேட்டோவில் இணைய விரும்பிய பின்லாந்திருக்கு ரஷ்யா, பல கட்டங்களாக மறைமுக எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், ரஷ்யாவின் கடும் எதிர்க்கையும் மீறி நேட்டோ கூட்டமைப்பில் 31வது உறுப்பினர் நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.

பின்லாந்து வெளியுறவு மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ, பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் அதிகாரப்பூர்வ ஆவணத்தை ஒப்படைப்பதன் மூலம், நேட்டோ கூட்டமைப்பில் இணைவு செயல்முறையை நிறைவு செய்தார்.

மேலும் பின்லாந்து மிகவும் திறமையான இராணுவத்தைக் கொண்டுள்ளது மற்றும் நேட்டோ தலைமையிலான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறது. இது எங்கள் மதிப்புகள் மற்றும் வலுவான ஜனநாயக நிறுவனங்களையும் பகிர்ந்து கொள்கிறது என்று அமெரிக்க உயர் தூதர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரஷ்யா, பின்லாந்து நேட்டோவில் இணைந்ததற்கு பதிலடியாக மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் தனது இராணுவ திறனை மேலும் வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Despite Russia warning Finland joined NATO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->