விதிகளை மீறி தோழியை காக்பிட்டில் அமர வைத்த விமானி - ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்.! - Seithipunal
Seithipunal


விதிகளை மீறி தோழியை காக்பிட்டில் அமர வைத்த விமானி - ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்.!

கடந்த பிப்ரவரி மாதம் துபாய் நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தின் காக்பிட்டில் தனது பெண் தோழியை பயணிக்க செய்த விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

"விமானத்தில் பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்து பயணம் செய்ய வைத்த விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது.

அதனால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறியதற்காக மூன்று மாதங்களுக்கு பணிஇடைநீக்கம் செய்யப்படுகிறார். 

மேலும், இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது. ஏர் இந்திய விமானத்தில் நடந்த இந்த சம்பவம் ஒப்பாரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DGCA thirty lakhs fined to air india flight comapany


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->