அமெரிக்கா : எலிகளிடம் உருமாறிய 3 வகையான கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி என்ற அறிவியல் நிறுவனம் நுண்ணியிர் மற்றும் அதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் அறிவியல் இதழில் வெளியான கட்டுரையில், கோவிட்-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகள் எலிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

உயிரியலாளர்கள், வைராலஜிக்கல் ஆய்வுகள் மற்றும் மரபணு வரிசைமுறைக்காக 79 எலிகளிடமிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்பட்ட போது 13 எலிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று ஆரம்ப காலங்களில் எலிகளிடமிருந்து மனிதருக்கு பரவியதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நகர்ப்புற பகுதிகளில் அதிக அளவு எலிகள் காணப்படுவதால் எலியிடமிருந்து மனிதருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Discovery of 3 types of coronavirus mutated in mice in America


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->