உலகம் முழுவதும் 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு.! - Seithipunal
Seithipunal


உலகின் பொழுதுபோக்கு அம்சத்தில் ஜாம்பவானாக திகழ்கிறது வால்ட் டிஸ்னி. இணையதளம், சினிமா, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் கார்ட்டூன் என பல்வேறு வடிவங்களில் மக்களின் பொழுதுபோக்கு அம்சத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டிஸ்னி நிறுவனத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், நிறுவனம் முழுவதும் ஏற்படும் செலவுகளைக் குறைக்க 7,000 ஊழியர்களை பணிநீக்கம் டிஸ்னி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் பேசும் பொழுது, உலகில் பல நிறுவனங்கள் சவாலான பொருளாதார சூழ்நிலையை எதிர் நோக்க செலவினங்களை கட்டுப்படுத்தி வருகிறது. இதற்காக நிறுவனம் முழுவதும் $5.5 பில்லியன் செலவுகளை மிச்சப்படுத்தும் இலக்கை கொண்டுள்ளேன்.

நிறுவனத்தில் பணி நீக்கங்கள் செய்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய உதவும் என தெரிவித்துள்ளார். மேலும் சந்தாதாரர்களின் வளர்ச்சியில் மந்தநிலை, சரிவு காரணமாக செலவுகளை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disney decided to lay off 7000 employees world wide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->