டிரோன் மூலம் ரஷ்ய கடற்படை தலைமையகம் மீது தாக்குதல் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் ரஷ்யாவின் மும்முனை தாக்குதலால் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தில் உள்ள செவஸ்டோபோல் நகரில் அமைந்துள்ளது.

இதையடுத்து நேற்று காலை கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது 'டிரோன்' தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேர்க்கவில்லை. அதே சமயம் இதுபற்றிய கூடுதல் தகவல்களை வழங்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

ரஷ்யாவில் நேற்று கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drone attacks Russian navy headquarters in blacksea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->