மனைவியின் கவர்ச்சி புகைப்படங்களால் மாட்டிக்கொண்ட போதை பொருள் கும்பல் தலைவன்!
Drug gang boss caught by wifes sexy photos
அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் மனைவி தனது கவர்ச்சியான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார்.அப்போது போதை பொருள் கும்பல் தலைவன் மனைவியின் கவர்ச்சி புகைப்படங்களால் போலீசில் மாட்டிக்கொண்டான்.
அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக இருந்து வருபவன் 43 வயதான லூயிஸ் கிரிஜல்பா. இவருடைய மனைவி எஸ்தபானியா மெக்டொனால்டு ரோட்ரிகீஸ். லூயிஸ் கிரிஜல்பாபோலீசாரால் தேடப்படும் நபராக உள்ளார்.
மேலும் இவருக்கு எதிராக, கோஸ்டா ரிக்காவில் இருந்து கொக்கைன் என்ற போதை பொருளை ஏற்றுமதி செய்து வருகிறார் என்ற புகார்கள் உள்ளது.இதையடுத்து இது தொடர்பாக, லூயிஸ் கிரிஜல்பாவை கைது செய்ய அமெரிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், மனைவி எஸ்தபானியாவுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு சென்ற லூயிஸ், ஈபிள் கோபுரம் முன் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதையடுத்து லண்டன் நகருக்கு சென்ற லூயிஸ், லண்டன் பாலம் அருகே காணப்பட்டார்.
கவர்ச்சியான உடையுடன் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த லூயிசின் மனைவி அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது வழக்கம் . அந்தவகையில் பாரீஸ் நகருக்கு சென்ற லூயிஸ், ஈபிள் கோபுரம் முன் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் மற்றும் லண்டன் நகருக்கு சென்ற லூயிஸ், லண்டன் பாலம் அருகே காணப்பட்ட புகைப்படங்களைபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்,

இதை நோட்டமிட்ட தேசிய குற்ற புலனாய்வு முகமை (என்.சி.ஏ.) அதிகாரிகள் இந்த அடையாளங்கள் அவர்கள் எந்த பகுதியில் உள்ளனர் என்ற விவரங்களை காட்டியுள்ளது.இந்த புகைப்படங்களின் உதவியுடன், லூயிசை பின் தொடர்ந்து சென்று கைது செய்தனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, எப்போதும், லூயிஸ் வெளிநாடு செல்லும்போது, மனைவியை விட்டு தனியாக இருக்க கூடியவர் என்றும் ஆனால், இந்த முறை மனைவியுடன் நெடுநேரம் ஒன்றாக செலவிட்டு உள்ளார் என்றும் இதில், அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார் என தெரிவித்தனர்.
மேலும் கொலம்பியா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர்என்றும் பல சுற்றுலா ஸ்தலங்களில் புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளனர் என்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கின்றனர் என்றும் பல மாதங்களாக, கிரிஜல்பாவை அதிகாரிகள் பின்தொடர்ந்து வந்துள்ளனர் என்றும் இந்த முறை அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என கூறினர்.
ஏற்கனவே லூயிசுக்கு எதிராக, 2 படுகொலை முயற்சிகளில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன என என்.சி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Drug gang boss caught by wifes sexy photos