சுற்றுலா சென்ற இடத்தில் தலைக்கேறிய மதுபோதை.. சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் சடலமாக மீட்பு!
Drunken at the picnic spot. Three teenage girls found dead in hotel room
கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள். தோழிகளான இவர்கள் மூன்று பேரும் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் பரிதாபமாக இறந்துள்ளனர்.. மேலும் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களின் உடலையும் மீட்டனர்.

இதையடுத்து தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அறையில் இருந்த காலி மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடந்த முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் அதீத போதை காரணமாக இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Drunken at the picnic spot. Three teenage girls found dead in hotel room