அமெரிக்காவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5:35 மணியளவில் மிட்லாண்டிலிருந்து வடமேற்கே 22 கிலோமீட்டர் தொலைவிலும், சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது மேற்கு டெக்சாஸின் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மூன்று நிமிடங்களுக்குப் பிறகு 3.3 ரிக்டர் அளவு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை, மிட்லாண்டிலிருந்து 20 மைல் தென்மேற்கில் உள்ள ஒடெசா வரை ஒரு பெரிய பகுதியில் உணரப்பட்டது என்று வானிலை ஆய்வாளர் ஜேக்கப் ரிலே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake hits oil producing region in America


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->