மலேசியாவில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


மலேசியாவில் கோலாலம்பூர் அருகே இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தென்மேற்கே 566 கி.மீ. தொலைவில் இன்று காலை 8.59 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. இதற்கு முன்பு, கடந்த செவ்வாய் கிழமை சுமத்ரா தீவின் தென்மேற்கு கடலோர பகுதியில் நீர்நிலையில் இரவு 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அது பெங்குலு, தெற்கு சுமத்ரா மற்றும் லாம்பங்க் மாகாணங்களுக்கு அருகே உணரப்பட்டது. கடற்கரையில் இருந்து 64 கி.மீ. தொலைவில் கடலுக்குள் இந்நிலநடுக்கத்தின் மையம் ஏற்பட்டு இருந்தது. எனினும், இதனால் பாதிப்புகள் எதுவும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Malaysia 6.1 rictor measurement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->