திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!!
earthquake in malaysia and philippines
பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லிசான் தீவு உள்ளது. அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோமீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பொது மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
English Summary
earthquake in malaysia and philippines