டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பின் எதிரொலி; ஹாலிவுட் படங்களுக்கு செக் வைத்த சீனா..!
Echoes of Donald Trump tariffs China imposes restrictions on Hollywood films
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், இந்திய மற்றும் சீனா பொருட்களுக்கு அமேரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பொருட்களுக்கும் வரி விதித்துள்ளது. இந்த காரணமாக பொருளாதார போர் உருவாகியுள்ளது. இந்த வரிப்போர் காரணமாக, ஹாலிவுட் படங்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சில நாட்களாக, வர்த்தக போர் நடக்கிறது. டொனால்ட் டிரம்ப், நேற்று சீனப் பொருட்களின் மீதான வரிகளை 125 சதவீதமாக உயர்த்திய நிலையில், சீனா 84 சதவீத பழிவாங்கும் வரியை விதித்துள்ளது. இதன் காரணமாக ஹாலிவுட் படங்கள் மீது சீனா சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து சீன திரைப்பட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 'உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், சீனாவில் திரையிடப்படும் அமெரிக்காவின் ஹாலிவுட் திரைப்படங்களின் எண்ணிக்கையை மிதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் சந்தை சட்டத்தைப் பின்பற்றுவோம், பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம், அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம்.' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் வெளிநாட்டுப் படங்களின் எண்ணிக்கையை பீஜிங்கில் கட்டுப்படுத்தி வருகிற நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை, அமெரிக்க ஸ்டுடியோக்களுக்கு பெரும் அடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
English Summary
Echoes of Donald Trump tariffs China imposes restrictions on Hollywood films