ஈபில் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் பாரீஸ்! - Seithipunal
Seithipunal


உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள ஈபில் டவர், கடந்த 1889 ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

உலகில் அளவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஈபில் டவர் உள்ளது. இந்நிலையில் இன்று காலை, ஈபில் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கை காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து ஈபில் டவர் மூடப்பட்டது. 

பின்னர் வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் அந்த மிரட்டல் போலியானது என தெரியவந்தது. 

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஈபில் டவர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. 

இதே போல், ஈபில் டவரில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eiffel tower evacuated bomb threat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->