மின்சாரம் சேமிப்பு: ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் முன்கூட்டியே அணைக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இந்த கோபுரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகள் ஒளிர்கின்றது. ஈபிள் கோபுரத்தில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணி வரை மின்விளக்குள் ஒளிரும். அதன்பிறகு அணைக்கப்படும். 

இந்நிலையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வினியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதால் பிரான்ஸ் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன காரணமாக பாரீஸ் நிர்வாகம், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகளை முன்கூட்டியே அணைக்க முடிவு செய்துள்ளது. 

அதன்படி வருகிற 23-ந்தேதி முதல் உள்ளூர் நேரப்படி இரவு 11:45 மணிக்கே ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும் என்று அந்த நகரின் மேயர் அன்னே ஹிடால்கோ தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பாரீசில் உள்ள பொதுகட்டிடங்களில் உள்ள மின் விளக்குகள் இரவு 10 மணிக்கு அணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eiffel Tower's lights decided to turn off early


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->