காணாமல் போன இந்திய மாணவி - தகவல் அளிப்போருக்கு 8 லட்சம்.!
eight laksh prize announce found indian student in america
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் மயூஷி பகத். இவர் மேற்படிப்பிற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு எப் 1 மாணவர் விசாவில் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவர் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி அங்கு இருந்து வெளியேறி உள்ளார்.
அதன் பிறகு அவரை காணவில்லை. இதையறிந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் கடந்த 2019 மே 1ஆம் தேதி, புகார் அளித்திருக்கின்றனர். அதன் படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு மையம், காணாமல் போனவர்கள் பட்டியலில் மயூஷி பெயரை சேர்த்து இருக்கின்றது.
இந்த நிலையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மயூஷி பகத் இருப்பிடம் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது . இந்தப் பரிசுத்த தொகை இந்திய மதிப்பில் ரூ. 8.33 லட்சம் ஆகும்.
English Summary
eight laksh prize announce found indian student in america