பிரேசிலை சூறையாடிய வெப்பமண்டல சூறாவளி - 11 பேர் உயிரிழப்பு ; 25 பேர் மாயம்.!! - Seithipunal
Seithipunal


பிரேசிலை சூறையாடிய வெப்பமண்டல சூறாவளி - 11 பேர் உயிரிழப்பு ; 25 பேர் மாயம்.!!

பிரேசில் நாட்டின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டேடோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இந்த வெப்ப மண்டல சூறாவளியில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் மாயமாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து இந்த மாநிலத்தில், கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.

இதில் குறிப்பாக, சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாநிலத்தின் ஆளுநர் எட்வார்டோ லைட் தெரிவித்ததாவது"-  "காரா நகரின் நிலைமை எங்களை மிகவும் கவலையடையச் செய்கிறது. 

பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளை வரைபடமாக்கி, ஆதரவு தேவைப்படும் மக்களை அடையாளம் காண வேண்டியது அவசியம். கடந்த இரண்டு நாட்களில் 2,400 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம்" என்றதை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eleven peoples died and 25 peoples missing in brezil for tropical cyclone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->