ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதால் மஸ்க்கிற்கு ஏற்பட்ட சிக்கல்?
Ellon musk in trouple
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை விமர்சித்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ததால், நீதிமன்றத்தில் அடுத்ததடுத்து வழக்குகளை சந்திக்கும் நிலைக்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரரான எலான் மஸ்கின் , ஸ்பேஸ்எக்ஸ், செயற்கை கோள் தயாரிப்பு, விண்வெளியில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துதல், விண்வெளி ஆராய்ச்சி, தொலை தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் பணியாளர்கள் பணியிடத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், எலான் மஸ்கின் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்து உயர் அதிகாரி க்வைன் ஷாட்வெல் என்பவருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இதனால் எரிச்சல் அடைந்த நிறுவனம், புகார் அளித்த 8 பேரை ஸ்பேஸ்எக்ஸ் பணிநீக்கம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து அமெரிக்காவின் தேசிய பணியாளர் நல வாரியத்திடம் புகாரளித்தனர்.
பணியாளர் நல சட்டப்படி ஊழியர்களுக்கு எல்லாவித உரிமைகளும் இருந்த போதிலும் அதனை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் என பணியாளர்களின் வழக்கறிஞர் டெபோரா லாரன்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நல வாரியத்தின் வழக்கறிஞருடன் ஸ்பேஸ்எக்ஸ் தரப்பு வழக்கறிஞர்கள் விவாதிப்பார்கள். இதில் சுமூகமான முடிவு எடுக்கப்படாவிட்டால் நீதிமன்ற வழக்குகளை எலான் மஸ்க் அடுத்தடுத்த சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார். சட்டவிரோதமான பணிநீக்கம் என்பது உறுதியானால், ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தி, நஷ்ட ஈடும் தரவேண்டியது இருக்கும்.