ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணிக்கை!இந்தியாவின் வாக்கு எண்ணும் முறையை பாராட்டிய எலான் மஸ்க் - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செனட் தேர்தல் முடிவை அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5-ந்தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், தற்போது கலிபோர்னியாவில் செனட் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். 

இந்த தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் மைக்கேல் ஸ்டீல், ஜனநாயகக் கட்சி சார்பில் டெரெக் டிரான் போட்டியிட்டனர். இது நேற்று 2 வாரங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னும் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதற்கிடையில், தொழில்நுட்பத் துறையில் பிரபலமான எலான் மஸ்க், சமூகவலைதளத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவிடப்பட்டுள்ளது என்று குறிபிட்டுள்ளார். இதை அவர் கலிபோர்னியாவின் தொகுதி வாக்குகளுடன் ஒப்பிட்டார். 

கலிபோர்னியாவில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு தபால் வாக்கு சீட்டும் தனித்தனியாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த சரிபார்ப்பு மற்றும் கணக்கீடு செயல்முறை காரணமாக, தேர்தல் முடிவுகளை விரைவில் அறிவிப்பது சிரமமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon Musk praised India vote counting system


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->