இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். 

சமீபத்தில் வெடித்த மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு தப்பி சென்ற நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனால், ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொது சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவை விநியோகம் ஆகியவற்ற கருத்தில் கொண்டு இலங்கையில் மீண்டும் அவசரநிலையை ரணில் விக்ரமசிங்கே கலந்த 19ஆம் தேதி அறிவித்தார். 

அதன் பிறகு நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார். பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன்பு ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலை சட்டம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emergency Extended in Srilanka


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->