திருநங்கைகளுக்கு நோ.. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகள் ரத்து; இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
England court has cancelled all gender recognition certificate issued to transgender people
அமெரிக்க ஜனாதிபதியாக 02-வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு அதிரடியாக தடை விதித்தார். அத்துடன், அவர்கள் நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக பெரும்பாலான திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.இதனையடுத்து இங்கிலாந்தில் தற்போது திருநங்கைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு சட்டபூர்வமாக அனுமதி அளித்தது.

ஆனால், அவர்களை தனி பாலினம் என வரையறுக்காமல் ஆண் அல்லது பெண் என இரண்டு இனங்களில் ஏதவாது ஒரு இனத்தில் தன்னை இணைத்து கொள்ளலாம் எனவும், அதற்காக பாலின அங்கீகாரச் சான்றிதழை ஆண் அல்லது பெண் இனத்தில் பதிவு செய்து கொண்டு கட்டாயம் வாங்க வேண்டும் என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிஇருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் வசித்து வரும் பெரும்பாலான திருநங்கைகள் தங்களை பெண்கள் என அடையாளப்படுத்தி கொண்டு பாலின அங்கீகாரச் சான்றிதழை பெற்று கொண்டு வந்துள்ளனர். இதனால் ராணுவம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் ஆக்கிரமிப்பு செய்வதாக பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், திருநங்கைகள் தங்களுக்கு உண்டான இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் உரிமை கோர கூடாது எனக்கூறி இங்கிலாந்தில் உள்ள பெண் உரிமை போராளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை பெண் நீதிபதி உள்பட 04 பேர் கொண்ட சிறப்பு தனி அமர்வு நீதிபதிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, பெண்கள் என்னும் வரையறைக்குள் திருநங்கைகளை கருதுவது சட்டவிரோதம் என்றும் திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது எனவும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளனர். குறித்த தீர்ப்பைவரவேற்கும் விதமாக அந்நாட்டின் பெண் உரிமை குழுவினர் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடியுள்ளனர்.
English Summary
England court has cancelled all gender recognition certificate issued to transgender people