இந்தியாவிற்கு ஆதரவு தரும் இங்கிலாந்து!....ஐ.நா சபையில் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்து வரும் நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அதிலும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக 5 நாடுகள் மட்டுமே உள்ளன.


மேலும் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்களாக மற்ற 10 நாடுகள் உள்ள நிலையில், சர்வதேச அளவில் தற்போது மிகப்பெரிய பொருளதார நாடாக  இந்தியா வளர்ந்து வருகிறது.

இந்த சூழலில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்த வரிசையில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இங்கிலாந்து  பிரதமர் கேர் ஸ்டாமர் தெரிவித்ததாவது, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிப்பதை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

மேலும்  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், பாதுகாப்பு சபை அதிகளவு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும், ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England supporting India What happened in the UN


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->