அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி.! ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்..!
Erdogan won the Turkish presidential election again
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த 20 வருடங்களாக நீதி மற்றும் வளர்ச்சி கட்சியைச் சேர்ந்த எர்டோகன் ஆட்சி செய்து வருகிறார். மேலும் பிப்ரவரியில் ஏற்பட்ட பேரழிவு சம்பவங்களில் எர்டோகன் ஆட்சி மெத்தனமாக செயல்பட்டதாக எர்டோகன் ஆட்சியின் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து துருக்கியில் முதல்கட்டமாக கடந்த 15-ந் தேதி அதிபர் ஆட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எர்டோகன் 49.52 சதவீத வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றார். இதைத்தொடர்ந்து எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாததால் துருக்கியில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தாயீப் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். தன்னை எதிர்த்து போட்டுயிட்ட கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எர்டோகன் அதிபராக பதவி வகிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எர்டோகன் ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றது எர்டோகன் ஆட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
English Summary
Erdogan won the Turkish presidential election again