2035 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்கும் ஒப்பந்தம்.! ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் - Seithipunal
Seithipunal


2035ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.

மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், 2035 முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 

இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கார் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் வாகனங்களில் இருந்து வெளியாகும் CO2 வாயு வெளியேற்றத்தை 2035க்குள் 100 சதவீதம் குறைக்க வேண்டும். அதாவது 2035ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலும் இல்லாமல் சாத்தியமாக்கும் இலக்கை அடைய வேண்டும்.

மேலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாகும் என்று பாராளுமன்றத்தின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் ஜான் ஹுய்டெமா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EU approval Agreement banning sale of petrol and diesel cars from 2035


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->