இம்ரான் கானுக்கு 8 நாள் காவல்..!! இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு..!!
Ex Pakistan Prime Minister Imran Khan 8 days in custody
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். இம்ரான்கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்தனர். இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட இம்ரான்கானை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இம்ரான் கானை போலீசார் கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவம், உளவு அமைப்புகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைதானார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் முழுவதும் கலவரம் பிடித்து பதற்றமான நிலை உருவாகி உள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் இன்று இஸ்லாம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான் கானிடம் நீதிபதி விசாரணை நடத்தியதை தொடர்ந்து 8 நாள் காவலில் விசாரிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு நிலம் வாங்கியதில் மோசடி தொடர்புடைய வழக்கில் தற்போது 8 நாள் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கருவூலத்திற்கு வந்த பரிசுப் பொருள்களை விற்றது தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இம்ரான் கான் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Ex Pakistan Prime Minister Imran Khan 8 days in custody