புதிய தலைமுறைக்கு வழிவிடுவதே சிறந்தது! ஜோ பைடன் விளக்கம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து  ஜோ பைடன் விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன்  ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் இடையில் அவரது கொரோனா தொற்று  உறுதியானது. அதனை  அடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பலரும் ஜோ பைடன்  அவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் உடல் நல கோராறு ஏற்படுவதால் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று மறக்கமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்ஸை முன்மொழிவதாகவும் அதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டு அதிபர் தேர்தலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் அதிபத்தியத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதன்முறையாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் தெரிவித்ததாவது,

ஆபத்தில் இருக்கும் நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது எத்தனை பெரிய பதவிகளை விட மிக முக்கியமான ஒன்று. புதிய தலைமுறை இடம் பதவியை வழங்குவது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்.

அடுத்த ஆறு மாத காலம் அதிபராக மேற்கொள்ள வேண்டிய பணிகளை முழு கவனம் செலுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Explanation of Joe Biden withdrawal from the US presidential election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->