ஜப்பானிற்கு தீவிர எச்சரிக்கை...நாட்டை உலுக்கும் சூறாவளி...இதுவரை 3 பேர் பலி!
Extreme warning for Japan Typhoon shaking the country So far 3 people have died
ஜப்பானில் கரையை கடந்த சூறாவளியால் கடும் மழை ஏற்பட்டு, தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழலும் காணப்படும் நிலையில், அங்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
ஜப்பான் நாட்டில் ஷான்ஷான் என்ற சூறாவளி கரையை கடந்துள்ளது. இந்நிலையில் கியுஷு பகுதியில் சூறாவளி கரையை கடந்ததும், கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், பலத்த காற்று வீசியது. இந்த காற்றில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ள நிலையில், பலர் காயமடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து கொள்ளுங்கள் என்று தீவிர எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சூறாவளியால் மின்விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டது.
மேலும் அங்கு கடும் மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழல் காணப்படும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
English Summary
Extreme warning for Japan Typhoon shaking the country So far 3 people have died