நேட்டோ அமைப்பில் பின்லாந்து.. எச்சரிக்கும் விளாடிமிர் புதின்..!!
Finland in NATO and Viladimir Putin warns
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றதால் அந்நாடு மீது ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் தற்பொழுது வரை நீடித்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பின்லாந்து நேட்டோ படையில் இன்று இணைந்துள்ளது.
ஐரோப்பாவின் பாதுகாப்பு சீரமைப்பை ஏற்படுத்திய ரஷ்யா அதிபருக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இன்று பின்லாந்து இணைந்துள்ளது.
பின்லாந்தின் வெளியுறவு துறை அமைச்சர் மெக்கா ஹாவிஸ்டோ பிரான்சில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் அமெரிக்க வெளியவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இடம் அதிகாரப்பூர்வ ஆவணத்தை ஒப்படைத்ததன் மூலம் இந்த இணைப்பு உறுதியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பு மூலம் உக்ரைன் பாதுகாப்பிற்கு பின்லாந்து மிகவும் முக்கிய பங்களிக்கும் என்று அந்நாட்டு அதிபர் சால் நினிஸ்டோ உறுதியாக கூறியுள்ளார். மேலும் இது ஒரு சிறந்த நாள் மற்றும் முக்கியமான நாள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பை ஏற்றுக் கொள்ள முடியாத ரஷ்யா அதிபர் பின்லாந்து கடுமையான விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள் என்று எச்சரித்துள்ளார். உக்கிரனுக்கு ஆதரவாக இருக்கும் மேற்கு நாடுகளுக்கு அணு ஆயுத போர் எச்சரிக்கையை ரஷ்யா எனவே விடுத்துள்ளது.
English Summary
Finland in NATO and Viladimir Putin warns