பாரீசின் மிகப்பெரிய உணவுப் பொருட்கள் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


பாரீசின் மிகப்பெரிய மொத்த விற்பனை உணவு பொருட்கள் வழங்கும் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் விமான நிலையம் அருகே அமைந்துள்ள, மிகப்பெரிய உணவுப் பொருள்கள் வழங்கும் ருங்கிஸ் சர்வதேச மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இங்கு பிரான்ஸ் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், பால் பொருட்கள் மற்றும் பூக்கள் போன்றவை இங்குள்ள சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தீயானது 7 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் பரவியதால் பாரிஸ் முழுவதும் கரும்புவை சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் அப்பதியில் இருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்தினால் ஏற்பட்ட காயம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த மார்க்கெட்டில் 12 ஆயிரத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire broke out in the biggest food market in paris


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->