மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.! - Seithipunal
Seithipunal


நேற்று முன் தினம் ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்கேட் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்த நிலையில், நேற்று 2023-2024 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன் பின்னர் அது தொடர்பாக அவர் உரையாற்றினார்.

அதில், ஒருபகுதியாக ராணுவத்திற்காக ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில், ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி மூலதன செலவினத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த தொகையை புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் இதர ராணுவ தளவாடங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும். இதையடுத்து, வருவாய் செலவினத்திற்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத்தொகை சம்பள செலவுகள், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். தொடர்ந்து ஓய்வூதியம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மூலதன ஒதுக்கீடாக ரூ.8 ஆயிரத்து 774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதில், தனியாக பாதுகாப்பு துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ராணுவத்திற்கு வருவாய் செலவினமாக ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 162 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five lakhs ninety thousand crores allocated indian military in union budget


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->