சீனா : ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து -  5 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில், நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வழக்கமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென ரசாயன தொழிற்சாலையில், பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழந்தது. மேலும், இந்த வெடி விபத்தில், ஆலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். பலமணி நேரம் போராடி தீயை அனைத்து முடித்தனர். 

அதன் பின்னர் அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும், இந்த விபத்தில் எட்டு பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died for Explosion in chemical factory in china


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->