காங்கோவில் வெள்ள பெருக்கு - 120 பேர் உயிரிழந்ததாக தகவல்.!
floods affected one hundrad and twenty peoples died in kango
பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் படி, காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கனமழையால், வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, காங்கோ நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ட்விட்டரில் அதற்கான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, நாட்டின் பிரதமர் அலுவலகம் அங்குள்ள சாலையை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளது.நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
English Summary
floods affected one hundrad and twenty peoples died in kango