நான்காவது முறை முன் ஜாமீன் பெரும் இம்ரான்கான்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக பயங்கரவத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் கான் பொதுக்கூட்டம் ஒன்றில், காவல் உயர் அதிகாரிகளையும், நீதிபதியையும் மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கில், இஸ்லமாபாத் ஐகோர்ட் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி அதை ஏற்கனவே நீட்டித்து இருந்த நிலையில், பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீனை மேலும் 8 நாட்களுக்கு நீட்டித்து பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இம்ரான்கானுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் பெறுவது இது நான்காவது முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourth time imran khan get pre bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->