தீ வெள்ளத்தில் பிரான்ஸ்! நடந்தது என்ன? நீடிக்குமா.. கலவரம்!
France scores fire hundreds more
பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலியானதால் கடுமையான இன வன்முறை ஏற்பட்டுள்ளது:
பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் நேஹல்.எம் எனும் 17-வயது சிறுவன் பலியானார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நாடு முழுவதும் பரவியதால் பெரும் கலவரம் வெடித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரானதாக காவல்துறையை நினைத்து பிரான்சில் கடுமையாக இன ரீதியான வன்முறை அதிகரித்து பதட்டங்களை உண்டாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் போராட்டங்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஈடுபட்டு கார்களுக்கு தீ வைப்பது, உள்கட்டமைப்புகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கலவரத்தில் சுமார் 45 காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து 577 வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், 74 கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டதாகவும், 871 பொது இடங்களில் தீ வைக்கப்பட்டதாகவும், 20 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள், துணை ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த நாட்டு உள்ள துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஹல், பாரிஸுக்கு அருகிலுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டு ஒரே நாள் இரவில் 719 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கு முந்தைய இரவு சுமார் 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிஸின் தெற்கே நகரத்தின் மேயர், வின்சென்ட் ஜீன்ப்ரூன் வீட்டிற்குள் காரை மோதியதில், அவரது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒருவரை காயப்படுத்தி, தீவைக்க முயன்றுள்ளனர்.
இந்த தாக்குதலை சகிக்க முடியாது என பிரதம மந்திரி எலிசபெத் போர்ன், இதனை கொலை முயற்சியாக கருதுவதாக அரசாங்க வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார். சுமார் 45,000 காவல்துறையினரை பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
France scores fire hundreds more