விலை உயர்ந்த கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான அரிசோனாவில் விலை உயர்ந்த கார்கள், ட்ரக்குகளை ஏற்றிச்சென்ற பி.எஸ்.என்.எப் சரக்கு ரயில் வில்லியம்ஸ் பகுதிக்கு அருகே செல்லும்பொழுது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. மேலும் சரக்கு ரயிலின் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி கவிழ்த்தன.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகளிலிருந்த 20க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் டிரக்குகள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் பெட்டிகளிலிருந்து வெளியேறிய பலதரப்பட்ட விலை உயர்ந்த கார்கள் தரையில் கவிழ்ந்து நசுங்கிய நிலையில், 23 ரயில் பெட்டிகள் சேதமடைந்ததாக கோகோனினோ மாவட்ட அவசர மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ, படுகாயங்களோ ஏதும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கார்கள் மற்றும் ரயில் பெட்டிகள் கிரேன்கள் மூலம் அகற்றப்பட்டு தண்டவாளங்கள் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சரக்கு ரயில் விபத்திற்கான காரணம் பற்றி டெக்ஸாஸ் ரயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freight train carrying luxury cars derailed in America


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->