உக்ரைன் போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களுக்கு தங்கப்பதங்கள்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கப்பதங்கள் வழங்கியுள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது.

இந்த போரால் இருநாட்டினருக்கும் உயிர் சேதமும், பொருள் சேதமும் அதிகரித்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் உக்ரைன் போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களுக்கு ரஷ்யாவின் ஹீரோ மற்றும் ஆர்டர் ஆஃப் கரேஜின் கோல்ட் ஸ்டார் உள்ளிட்ட தங்கப்பதகங்களை வழங்கினார். இதற்கான வீடியோ ரஷ்யா பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold medal for russian soldiers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->