12000 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் - ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த கூகுள் நிறுவன சிஓஏ.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனத்தில் இருந்து சுமார் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும். இதுகுறித்து, நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அதாவது, "நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பல நிறுவனங்கள் கோவிட் மற்றும் அதன் பிறகான காலகட்டத்தில் ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்தன. இதனைத் தொடர்ந்து 2022 காலகட்டத்தில் கூகுளில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

பணிநீக்க நடவடிக்கைகளை கூகுள் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். எந்தவொரு நிறுவனத்திற்கும் பணிநீக்கம் செய்வது என்பது கடினமான சூழல். கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தருணத்தை நாங்கள் எதிர்கொள்ளவில்லை.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணிக் கணக்குகளுக்கான அணுகலை உடனடியாகத் துண்டித்தது மிகக் கடினமான முடிவு. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், நாங்கள் செயல்படவில்லை என்றால், அது ஒரு மோசமான முடிவாக இருக்கும் என்பது தெளிவானது” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

google company ceo sundar pichai speech about 12000 employees lay off


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->