மலையாள சினிமாவின் முதல் நடிகை பி.கே ரோஸியை கவுரவிக்கும் வகையில் சிறப்பு டூடூல் வெளியிட்ட கூகுள்.!
google company launch new doodle for maliyalam film industry first actor bk rosi birthday
ஜே.சி டேனியல் இயக்கிய விகதகுமாரன் தி லாஸ்ட் சைல்ட் படத்தில் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் பி.கே ரோஸி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரோஜினி என்ற நாயர் பெண்ணாக நடித்தார்.
இந்த சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அந்தக்காலத்தில் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஏனென்றால், பி.கே. ரோஸி ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
இந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல், இருந்த ரோஸி நாளடைவில் நடைப்பதை விட்டுவிட்டு, கேசவ பிள்ளை என்ற ஒரு லாரி ஓட்டுநரை திருமணம் செய்துகொண்டு தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார். அவருடைய நினைவாக, "பி.கே. ரோஸி பிலிம் சொசைட்டி" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு ஆண்களுக்கு மட்டுமே உரிய இடமாக இருந்த சினிமாத் துறையில் பெண்கள் இடம்பெறுவதை உறுதி செய்கிறது. தற்போது, பெண்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு, பெண் படைப்பாளிகளையும், பெண் திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று பி.கே. ரோஸியின் பிறந்தநாள் என்பதால், அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அத்துடன் ''உங்களுடைய தைரியத்திற்கும், விட்டுச்சென்ற மரபுக்கும் நன்றி பி.கே. ரோஸி'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
google company launch new doodle for maliyalam film industry first actor bk rosi birthday