கூகுள் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம் - நடந்தது என்ன?
google company lay off
பிரபல தேடல் நிறுவனமான கூகுள் தங்களது நிறுவனத்தில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை பணியாளர்களின் பணி நீக்கத்திற்கு வழிவகுக்கும் என மெமோவின் மூலம் தங்களது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரட் பணியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தங்களது நிறுவனத்தின் திறமையான சகப் பணியாளர்கள் மற்றும் விருப்பமான நண்பர்களிடம் இருந்து விடை பெறுவது வருத்தமாக உள்ளது.
இந்த மாற்றம் கடினமானது என்பதை நாங்கள் அறிவோம் என தங்களது மெமோவில் google தெரிவித்து இருக்கிறது. சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை கூகுள் குறிப்பிடவில்லை. இருப்பினும், 2024ல் இதுவரை 58,000 தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.