சாகும்வரை.. ஒரு பெண்ணை கூட அறியாமல் இறந்து போன நபரின் சுவாரஸ்ய வரலாறு.!  - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடாக இருக்கும் கிரீஸில் 1856ஆம் ஆண்டில் பிறந்த மிஹைலோ டோலோடோஸ் என்ற நபர் பிறந்த சற்று நேரத்தில் தாய் இறந்துவிட்டார். அதன் பின், அதோஸ் மலையில் இருக்கும் ஒரு மடாலயத்தில் ஆர்த்தடாக்ஸ் துறவிகளால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார். அந்த இடத்தில் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்களாம். 

இதனால், அவர் தன்னுடைய வாழ்நாளில் எந்த பெண்ணையும் நேரில் கண்டதில்லை. அவர் எண்ணியிருந்தால் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று எதிர் பாலினத்தை சந்தித்திருக்க முடியும். ஆனால் அவர் அந்த மலையை விட்டு வெளியேறவே இல்லை.

இதனை தொடர்ந்து, 1938ஆம் ஆண்டு டோலோடோஸ் தன்னுடைய 82வது வயதில் மறைந்தார். அதோஸ் மலையின் மடங்களில் வசிக்கின்ற துறவிகள் அனைவரும், வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ வேண்டும் எனும் கோரிக்கையை நிறைவேற்றுவதை உறுதி செய்வது தான் இந்த விதியின் பின்னணி.

ஆனால், இங்கு வசித்த துறவிகள் பலரிலும் டோலோடோஸ் மட்டும் தான் ஒரு பெண் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளாமல் இறந்த உலகின் ஒரே ஆண் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Greed men did Not know any women in his Whole life


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->