ஹிந்துக்கள், ஹிந்து மதம் குறித்து அவதூறு பேசினால் கடும் தண்டனை; அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம்..!
Hindus will be severely punished if they speak slanderously about Hinduism New law introduced in the United States
அமெரிக்காவில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ அல்லது அவர்களது சூழல்களை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் 25 லட்சத்திற்கும் மேலான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில்ஒன்றான ஜார்ஜியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்து மக்கள் வசித்து வருகின்றனர்.
இம்மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்துள்ளனர்.
குறித்த மசோதாவானது மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஹிந்து மதம் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என கூறப்படுகின்ற நேரத்தில், அதற்கான தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-6j3lj.png)
சமீபத்திய ஹிந்துக்கள் மீதான வெறுப்பை தவிர்க்க இந்த புது சட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மகிழ்வும், பெருமையும் கொள்கிறோம்' என்றும் அவர்கள் சபையில் தெரிவித்துள்ளனர். அத்துடன், உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
English Summary
Hindus will be severely punished if they speak slanderously about Hinduism New law introduced in the United States