தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி! சென்னையில் 1, குமரியில் 3 இடங்களில் எடுக்க அனுமதி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தேடி எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை மத்திய எரிசக்தி இயக்குநாகத்திடமிருந்து பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில் மூன்று தனித்தனியான இடங்களில் மற்றும் சென்னைக்கு அருகாமையில் மேலும் ஒரு இடத்தில் நடவடிக்கைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு முந்தைய ஆய்வுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கைக்கு ஒப்புதல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடல் உயிரியல் வளங்களை பறிக்கக்கூடிய இந்த நடவடிக்கை தொடர்பாக சில கேள்விகளும் எழுந்துள்ளன.

இருப்பினும், தேசிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தின் செயல்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கண்காணிக்கப்படும் எனவும், அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deep Sea gas ONGC Central Government tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->