இந்திய உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த நாடு.!
Hong Kong Bans Flights
உலகம் முழுவதும் உருமாறி உள்ள ஒமைக்ரான் வைரஸ் காரணமாக நோய்த் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் கொரோனா பாதிப்புகள் உறுதியாகி வருகின்றது.
இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உயிர் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக தடுப்பூசி போடுவதை தீவிரமாக பல நாடுகள் செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கும் ஹாங்காங் நாட்டின் அரசு தடை விதித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து தான் இந்த உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகம் பரவுவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, நோய் பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு வருகின்ற சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், அதனை அடுத்து இரண்டு வாரங்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.