காசாவில் நான்கு பிணைக் கைதிகளை மீட்ட இஸ்ரேலிய இராணுவம்
hostages were rescued in gaza
பாலஸ்தீன் நாட்டில் உள்ள காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தினரால் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின் போது நான்கு பிணைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. கடந்த ஆண்டு 2023 அக்டோபர் மாதம் அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பணயக்கைதிகளும் ஹமாஸால் பிடிக்கப்பட்டனர். நோவா இசை விழாவின் போது ஹமாஸின் படையினர் நூற்றுக்கணக்கான மக்களைக் கடத்தி பல உயிர்களைக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல லட்சம் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன.
காசாவில் நோவா பண்டிகையின் போது பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட நான்கு பிணைக் கைதிகளையும் இஸ்ரேல் ராணுவத்தின் மீட்பு நடவடிக்கையில் மீட்க பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பணயக்கைதிகள் 25 வயதான நோவா அர்கமானி, 21 வயதான அல்மோக் மீர் ஜான், 27 வயதான அட்ரே கோஸ்லோவ் மற்றும் 40 வயதான ஷ்லோமி ஜீவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காசாவில் மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளும் நலமுடன் இருப்பதாக ஐடிஎஃப் ஒரு அறிக்கையில்,"அவர்கள் நல்ல உடல்நிலையில் உள்ளனர், மேலும் மருத்துவ பரிசோதனைக்காக 'ஷீபா' டெல்-ஹாஷோமர் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அக்டோபர் 7-ம் தேதி 'நோவா' இசை விழாவில் இருந்து 4 பேரையும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
பணயக்கைதிகள் நுசிராட்டின் மையத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வர பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ்க்கும் இஸ்ரேல்க்கும் போர் தொடங்கியதில் இருந்து கிடைத்த மிகப்பெரிய மீட்சியாக இது கருதப்படுகிறது. இதுவரை ஹம்ஸிடமிருந்து ஏழு பிணைக்கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.
English Summary
hostages were rescued in gaza