என்னது டொனால்ட் டிரம்ப் இப்படி தான் ஜெயிச்சாரா..!!? OMG - Seithipunal
Seithipunal


முகநூல் மூலம் மக்களின் விவரங்களை திரட்டி அதன் மூலம் பல நாடுகளின் தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய மோசடியில் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற அந்த நிறுவனம் அமெரிக்கா அதிபர் தேர்தல் முதலிய முக்கிய தேர்தல்களில் மோசடி செய்ததாக பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 என்ற செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

Image result for channel 4 news

அமெரிக்க அதிபர் தேர்தலில்,டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக  செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா எனும் இணைய நிறுவனம், கிட்டத்தட்ட 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் தகவல்களை திருடியதாக செய்தி வெளிவந்துள்ளது. 

அந்த வாடிக்கையாளர்களின் தகவல்களை கொண்டு அவர்களது செயல்பாடுகளை தெரிந்து,எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றிய தவறான செய்திகளை அந்த வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா.இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர், அங்கு நடந்த இந்த சட்டத்திற்கு புறம்பான செயல்களை சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டார். 

Related image

மோசடிகள் தெரியவந்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்துடனான உடன்ப்பாட்டை  முகநூல்  நிறுவனம் ரத்து செய்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்கான தொடர் முயற்சிகளை பிரிட்டன் தகவல் ஆணையர் மேற்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how trump won USA president election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->