எகிப்து || கிறிஸ்தவ தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலி - Seithipunal
Seithipunal


எகிப்தி தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் மக்கள் தொகை மிகுந்த பகுதியில் உள்ள அபு சிபைன் தேவாலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு, தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில், தேவாலயத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ விபத்து சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Huge fire broke out in Egyptian church


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->