உ.பியில் சோகம் - மனைவியை கட்டியணைத்து துப்பாக்கியால் சுட்ட கணவன் - நெஞ்சைத் துளைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உ.பியில் சோகம் - மனைவியை கட்டியணைத்து துப்பாக்கியால் சுட்ட கணவன் - நெஞ்சைத் துளைத்த சம்பவம்.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் அனேக் பால் - சுமன் பால் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதும், இரண்டு நாள் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மீண்டும் சண்டையில் குதிப்பதுமாக இருந்து வந்தனர்.

ஆனால் இந்த சண்டை கடந்த ஒரு வாரமாக முடிவின்றி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையே அனேக் அடிக்கடி அமானுஷ்ய பூஜைகளை மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்தார். 

இந்த வினோத பூஜைகளும் தம்பதியர் இடையிலான சண்டைக்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் சண்டை குறித்து விரக்தியில் இருந்த அனேக் பின்னர் ஒரு முடிவோடு வழக்கமான பூஜையில் அமர்ந்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த பூஜையின் நிறைவாக, ஒரு முடிவோடு அனேக் எழுந்து வந்து, மனைவியை சாதுவாக அழைத்து கட்டியணைத்த அனேக், கையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை சுமன் முதுகில் வைத்து சுட்டுள்ளார். 

இதில், இருவரும் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, அனேக் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி, அந்த துப்பாக்கியை எங்கிருந்து பெற்றார் என்பது குறித்தும், அவர் மேற்கொண்ட அமானுஷ்ய பூஜைகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband died after kill wife in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->