"இந்தியாவுக்கு என்னை விட சிறந்த நண்பன் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்தப் பேட்டியில், ட்ரம்ப் இந்தியா மற்றும் பிரதமர் மோடி  குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

"இந்தியாவுக்கு என்னை விட சிறந்த நண்பன் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர் . அவர் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது கிடையாது. ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்து இருக்கிறோம்'' என்று தெரிவித்தார். 

பிறகு, மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த அவர் ; நான் போட்டியிட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். தேர்தல்களிலும் நான் முன்னிலை வகிக்கிறேன். விரைவில் இது குறித்து நான் முடிவு எடுப்பேன் என்று தெரிவித்தார். 

மேலும், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவாரா? என்ற விவாதங்கள் எழுந்துவரும் சூழலில் அவரது இந்தப் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

i think india better friend never me trumph speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->