நடன அழகியுடன் காதல்... துபாய் இன்ஜினியர் திருடனான கதை.! காதலன் செய்த விபரீத செயல்.!
iit engineer turns into a full time thief because of love
திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த ஐஐடி இன்ஜினியர் ஒருவர் தனது காதலிக்காக திருடனாக மாறி தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஹேமந்த் குமார் ரகு சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் படித்த இவர் துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.
வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அங்குள்ள மதுபான விடுதிக்கு சென்று பொழுதை கழித்து வந்திருக்கிறார் ஹேமந்த். அப்போது விடுதியில் நடனமாடும் பீகாரை சார்ந்த பெண்ணுடன் ஏமந்திற்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிட்டது. தனது காதலியையும் இனி பாரில் நடனம் ஆட வேண்டாம் எனக் கூறிய ஹேமந்த் அவரையும் அழைத்துக் கொண்டு பீகார் வந்திருக்கிறார்.
தனது காதலியை மகிழ்விப்பதற்காக கையிலிருந்து அனைத்து காசுகளையும் தண்ணியாக செலவழித்துள்ளார். இதனால் அவருடைய பல வருட உழைப்பில் சேமித்து வைத்த பணம் எல்லாம் செலவாகியது. புதியதாக பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமலிருந்து அவருக்கு உழைத்து சம்பாதிப்பது விட அதிகமான பணத்தை குறுக்கு வழியில் எப்படி திரட்டலாம் எனக் கூறி திருட்டு தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.
தனது தொழிலுக்காக ஒரு டீமை உருவாக்கி அவர்களின் உதவியுடன் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை தனது காதலிக்கு கொடுத்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த பதினொன்றாம் தேதி சாந்தி தேவி என்ற பெண்ணிடம் இரண்டே கால் லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இவரை பொறி வைத்துப் பிடித்தது காவல்துறை. மேலும் இவரிடமிருந்து கை துப்பாக்கி லேப்டாப் ஹார்ட் டிஸ்க் மற்றும் 56,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
English Summary
iit engineer turns into a full time thief because of love