ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்.! இறக்குமதி விகிதம் இரண்டு மடங்காக அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இரு மடங்கு அளவிற்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ஆனால் இந்தியாவுக்கு ரஷ்யா நட்பு நாடு என்பதால் எந்த வித தடையையும் விதிக்காமல் இருந்தது. அதே நேரத்தில் ரஷ்யா உடனான தொடர்பு நீடிக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

இநிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் ஒரு கோடியே 60 லட்சம் பேரல்கள் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்திருந்தன.

ரிலயன்ஸ், நயாரா எனர்ஜி, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் நிறுவனங்கள் அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Importing crude oil is increased


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->