சர்ச்சையில் சிக்கி தவிக்கும் இம்ரான்கான்.! வலைத்தளங்களில் வைரலாகும் ஆடியோ .! அப்படி என்னவா இருக்கும்?
imrankhan sexuall speach to woman audio viral in social medias
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியை இழந்தார். அதனால், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்க்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டு வரும் இவர், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இம்ரான்கான் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதும், தமது வீட்டுக்கு வரும்படி அந்த பெண்ணை வற்புறுத்துவதுமான ஆடியோ பதிவு ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாட்டின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை வைத்து அரசியல் கட்சியினர் பலரும் இம்ரான்கானை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இம்ரான்கான் இந்த ஆடியோ குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அதேவேளை இம்ரான்கானின் பெயரை கெடுப்பதற்காக போலியான ஆடியோ ஒன்றை அவருடைய அரசியல் எதிரிகள் வெளியிட்டுள்ளதாக இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
English Summary
imrankhan sexuall speach to woman audio viral in social medias