பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தை! இந்தியா நிறுத்திவிட்டதா?! உண்மை என்ன?! - Seithipunal
Seithipunal



பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்வது குறித்தான பேச்சு வார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டதாக வெளியான தகவல் ஆதாரமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் போலீசாரால் தேடப்படும் அம்ரித்பால் சிங்கிற்க்கு ஆதராவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது இந்திய தூதரகத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் இந்திய தேசியக் கொடியை இறக்கிவிட்டு காலிஸ்தான் தேசிய கொடியை ஏற்றினர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

காலிஸ்தானியர்கள் நடத்திய இந்த போராட்டம் குறித்து பிரிட்டன் செய்தி ஊடகங்கள் எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை.  பிரிட்டன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்தியா, பிரிட்டன் உடனான  வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. 

இவை அனைத்தும் பிரிட்டன் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரிட்டன் உடனான இந்தியாவின் வர்த்தகம் குறித்த செயல்பாடுகள் தொடர்பாக வெளிவந்த அனைத்து செய்திகளும் ஆதாரமற்றவை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Britan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->